உலக செய்திகள்சூடான செய்திகள்

இம்ரான் கானுக்கு முன் பிணை நீடிப்பு: இஸ்லமாபாத் மேல்நீதிமன்றம் உத்தரவு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு செப்டெம்பர் 1ஆம் திகதி வரை பிணை வழங்கி இஸ்லமாபாத் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், பொலிஸ் உயர் அதிகாரிகளியும் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைதாக கூடும் என்று பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி இஸ்லமாபாத் மேல்நீதிமன்றம் இம்ரான்கானுக்கு 3 நாள் முன் பிணை வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட முன் பிணை இன்றுடன் நிறைவடைவதையடுத்து அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட முன் பிணை நீட்டித்து இஸ்லமாபாத் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை பிணை வழங்கி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனுத்தாக்கல்..!

wpengine

இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்ட பெற்றோர்

wpengine

14 சிங்கங்கள் தப்பி ஓடியதில் மக்கள் அச்சத்தில்

wpengine