உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று(22) 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு



(FASTNEWS|COLOMBO)- அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் கட்டமைப்பு திருத்தப்பணிகள் காரணமாக இன்று(22) கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இன்று(22) முற்பகல் 9 மணிமுதல் நள்ளிரவு 12 வரையான 15 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு தெஹிவளை, கல்கிசை ,கோட்டை, கடுவலை ஆகிய மாநகர சபை எல்லை பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவை, கொல்ன்னாவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை கொட்டிக்காவத்தை, முல்லேரியா பிரதேச சபை பிரதேசங்கள், ரத்மலானை மற்றும் சொய்ஷாபுர ஆகிய குடியிருப்பு தொகுதிகளுக்கும் நீர்விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளும் வலுவாக்கப்படும்

wpengine

நல்லாட்சிக்கு ஒத்துழைக்காத சு.கட்சியினருக்கும் ஜனாதிபதிக்குமான கலந்துரையாடல் இன்று!

wpengine

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு?

wpengine