உள்நாட்டு செய்திகள்

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – களுத்துறை பிரதேசத்தில் சில பகுதிகளில் இன்று(24) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முற்பகல் 8.00 மணி தொடக்கம் நாளை(25) அதிகாலை 2.00 மணிவரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, தெற்கு கழுத்துறை, வடக்கு களுத்துறை, வாத்துவை, ஹிக்கடுவை, பொதுபிடிய,மொல்லிகொட மற்றும் மொரொன்துடுவ ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளன.

களுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்க வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஹிஸ்புல்லாஹ் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவில் முன்னிலை

wpengine

மூன்று சிங்கங்கள் லோர்ட்ஸ் மைதானத்தினை விக்கெட்களால் உலுக்கின (VIDEO)

wpengine

ரத்ன தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு சம்பிக்க தெரிவிப்பு…

wpengine