உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் 25% பஸ்களே சேவையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 4,000 முதல் 5,000 வரையான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இன்று (07) இயங்கும் தனியார் பேருந்துகளின் கொள்ளளவு 25 வீதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ காணப்படுகின்றது.

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE]

wpengine

தங்கத்தின் விலையில் மாற்றம்!

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் மருதானையில் கைது…

wpengine