உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்…



இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று(04) முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நேற்று(03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்ரசிறி இதனை அறிவித்திருந்தார்.

ஆனால் குறித்த தீர்மானத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ், தங்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக யசந்த கோதாகொட நியமனம்…

wpengine

விசேட நான்கு பொலிஸ் குழுக்கள்

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine