உள்நாட்டு செய்திகள்

இன்று பலத்த காற்றுடன் மழையுடன் கூடிய காலநிலை..



மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு பகுதிகள் மற்றும் ஊவா மாகாணத்துடன், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று(15) 40 – 50Km இற்கும் இடைய பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனுடன் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என குறித்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் நாட்டின் பல பிரதேசங்களில் மழையற்ற காலநிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மற்றும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் சில வேளைகளில் 55 – 60Km வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

வடக்கில் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

பிரபல நடிகை தீபானி சில்வா பிணையில் விடுதலை…

wpengine

அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று

wpengine