உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று ஜெனீவா தீர்மானம் குறித்து நாடாளுமன்ற விவாதம்



ஜெனீவா தீர்மானம் குறித்து நாடாளுமன்ற விவாதம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(20) விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்த விவாதம் தொடர்பில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கூடி இந்த விவாதம் குறித்து ஆராயவுள்ளனர்.

இரண்டு நாட்கள் விவாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் சில வேளைகளில் இந்த விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும், நாடாளுமன்றில் பகல் போசனத்திற்காக இடைவேளை விடாது தொடர்ச்சியாக விவாதத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – தற்போது பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு..!

wpengine

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களை முற்றுகையிடுமாறு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அழைப்பு..!

wpengine

கனடாவின் மத்திய டொரோண்டோ வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி…

wpengine