உள்நாட்டு செய்திகள்

இன்று சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை ஆரம்பம்



சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று 18ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளும் இன்று 18 ம் திகதி விடுமுறை வழங்கப்படுவதுடன் மூன்றாம் தவணைக்காக ஜூலை 21ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

19 ம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்குவதாகவே கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதை முன்னிட்டு கல்வி அமைச்சிடம் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளை கருத்திற் கொண்டு இன்று 18ம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று 18ம் திகதிக்காக பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் பிரத்தியேக சனிக்கிழமை தினம் ஒன்றில் பாடசாலை நடத்துமாறும் கல்வி அமைச்சு  மேலும் அறிவித்துள்ளது.

Related posts

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

wpengine

இங்கிலாந்து அணிக்கு சவாலாக இலங்கை அணி இன்று களமிறங்குகிறது

wpengine

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

Azeem Kilabdeen