உலக செய்திகள்

இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா



(ஃபாஸ்ட் நியூஸ் |பிரித்தானியா) – பிரித்தானியா உத்தியோகபூர்வமாக இன்று(31) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது.

எனினும், பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 11 மாத நிலைமாற்ற காலம் உள்ளமையால், பெரும்பாலான விடயங்கள் அப்படியே இருக்கும் என்றும் சில மாற்றங்கள் மட்டும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இழக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் தருணத்தில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அரசியல் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் விட்டு வெளியேறும்.

எவ்வாறாயினும், நிலைமாற்றக் காலத்தில் ஐரோப்பிய நீதிமன்ற விதிகளை பிரித்தானியா பின்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லண்டனில் கிறிஸ்மஸ் நாளில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..

wpengine

பிரேசிலுக்கான தூதரை திரும்ப அழைக்கும் துருக்கி

wpengine

இந்தியாவின் பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதியை பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரிப்பு

wpengine