Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று அதிகாலையுடன் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிப்பு..!

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

434 ரூபாயாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

Related posts

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை

Azeem Kilabdeen

சீரற்ற காலநிலை காரணமாக போட்டியில் தாமதம்…

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் இராணுவ பாதுக்காப்பு நீக்கப்படாது!!

wpengine