உள்நாட்டு செய்திகள்

இன்றும் மாகாணங்கள் பலவற்றிற்கு கன மழை…



மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றும்(11) கன மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணம் மற்றும் பிபில பிரதேசத்தில் இடைக்கிடையில் மணிக்கு 50Km வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடிய நிலையில், மின்னல்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைத்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அத்திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

 

(rizmira)

Related posts

இரத்மலானை – பொருபன பகுதியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு…

wpengine

நாடு திரும்பியவர்களுக்கான விசேட அறிவிப்பு

wpengine

பசிலுக்கு கட்சியின் அமைப்பாளராக வருவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு – ஐ.ம.சு.மு

wpengine