உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(02) காலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது.

வடமாகாணம் , வடமத்திய மாகாணம், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 24 மணித்தியாலத்தில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்றும் இது 150 மில்லிமீற்றரை தாண்டியதாக அமையும் என்றும் திணைக்களம் இன்று(02) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மலையக பிரதேசங்களிலும் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் . இடிமின்னலின் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

wpengine

வற் வரி திருத்தங்கள் குறித்த அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்..

wpengine

இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் கைதிகள்…

wpengine