உள்நாட்டு செய்திகள்

இன்றும் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி…



(FASTNEWS | COLOMBO) – அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமான நிலையில் சகல பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தரம் 6 முதல் 13ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ம் திகதி பாடசாலை 2ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , குறித்த காலப்பகுதியிலும் மாணவர்களின் வருகை குறைந்தளவிலேயே காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி

wpengine

லண்டன் மாநகர சபைக்கு நெருக்கடி கட்டணங்கள் செலுத்த வேண்டிய நாடுகளில் இலங்கையும் பதிவு

wpengine

கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine