உள்நாட்டு செய்திகள்

இன்றும் பல மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும்.

ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 45Km வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

wpengine

நிலவும் வறட்சியான காலநிலை – அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள்….

wpengine

மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்க தீர்மானம்…

wpengine