உள்நாட்டு செய்திகள்

இன்றும் பல மாவட்டங்களுக்கு மழை..



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்றும்(22) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மொனராகலை மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காங்கேசன் துறையிலிருந்து புத்தளம் வழியாக, கொழும்பு வரையிலும், காலியிலிருந்து மாத்தறை வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55Km வேகத்தில் வீசக்கூடும் எனவும் கால நிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

#reeshma..

Related posts

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

wpengine

எதிர்வரும் பாடசாலை விடுமுறை குறித்து விசேட அறிவித்தல்…

wpengine

திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டது…

wpengine