உள்நாட்டு செய்திகள்

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..


நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(13) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கடும்மழை பெய்யக்கூடும் எனவும் புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று(13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளைகளிலும் மழை பெய்ய கூடும் என திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

வாகன வருமான அனுமதிப் பத்திரம் – செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

wpengine

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

wpengine

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டு வாடகை…

wpengine