உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் சில பிரசேதங்களில் இன்றும்(12) நாளையும்(13) மழைபெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யுக்கூடும் எனவும் ஏனைய பிரதேசங்களில் ஆங்காங்கே பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலைவேளையில் பனிமூட்டத்துடனான காலநிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்றுவீசுக்கூடும் இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருது குரோஷிய அணியின் லூகா’விற்கு…

wpengine

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு…

wpengine