உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் மழையுடன் கூடிய காலநிலை..



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(01)  நாளையும்(02) மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடமேல், மேல், வடமத்திய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழையுடன் கடும் காற்று வீசக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடி மின்னல் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

Related posts

7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ட்ரம்ப் உத்தரவு…

wpengine

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

wpengine

சூடாகும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில்..

wpengine