Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மின் விநியோக துண்டிப்பு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்று 2/3 பெரும்பான்மையோடு, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் – உயர் நீதிமன்றத்தில் ஹக்கீம் தெரிவிப்பு..!

wpengine

2019 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு…

wpengine

இதுவரை 4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்..

wpengine