Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்றும் சில மாவட்டங்கள் முடங்கின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(29) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம் : கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கங்ஹிந்தசெவன தொடர்மாடி குடியிருப்பை தவிர்ந்த ஏனைய பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொரல்ல 100 ஆம் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காலி இந்துருவ கோனகல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொல்தொடுவ கிராமம், அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தப்பிட்டி கிராமம், மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் இந்தியர்கள் அறுவர் வெள்ளவத்தையில் கைது

wpengine

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

wpengine

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்…

wpengine