Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 காவல்துறை அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சிலவா அறிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று (18) காலை மேலும் இரண்டு மாவட்டங்களின் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்தின் கப்புகொட செபஸ்டியன் வீதியில் இருந்து தெபடிய வீதி வரையான பகுதியும், பிட்டிபன – லெல்லம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் ரொட்டே கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் வேறோர் இடத்திற்கு மாற்றம்

wpengine

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16பேருக்கு காயம்

wpengine

களனி பல்கலைக்கழகம் மே 4 வரை மூடப்படுகின்றது

wpengine