உள்நாட்டு செய்திகள்

இன்றும் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு கடும் மழை..



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாக சீரடையும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் இன்று(01) இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் 75mm அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என குறித்த அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் மன்னாரில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70Km வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், அந்த கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்பட கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

போதைப்பொருள் வர்த்தகம் :13 பேர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்..

wpengine

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்துக்கு பூட்டு…

wpengine