உள்நாட்டு செய்திகள்

இன்றும் இடியுடன் கூடிய மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்று(21) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

புத்திஜீவிகளை ஊருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம்…

wpengine

மின்சாரம் தாக்கி பலி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

wpengine

2021.01.25 : அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

wpengine