உள்நாட்டு செய்திகள்

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு



(FASTNEWS|COLOMBO) – வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிரதேசகளில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார்,யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? – அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

wpengine

ஜேர்மன் தாக்குதல் – இலங்கையர் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை இல்லை.

wpengine

மத்திய வங்கி பிணைமுறிகள் விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை ஊடாக தீர்வு – ஜனாதிபதி.

wpengine