உள்நாட்டு செய்திகள்

இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் தெமட்டகொட “டான் பிரியசாத்” கைது.


இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் “டான் பிரியசாத்” என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் எனும் நபரை கைது செய்ய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டு இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

வாக்குமூலமொன்றை பதிவு செய்ய குறித்த நபரை இன்று(15) கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்திருப்பதாகவும், இதன்போது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Related posts

பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உரையாடல்களை அழிக்க உத்தரவிட்டார்.. – நுவன் சல்காது..

wpengine

ஒரு கோடிக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு…

wpengine

புதன்கிழமைக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்…

wpengine