உள்நாட்டு செய்திகள்

இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை…



இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குற்றம் புரிபவர்கள் மற்றும் அமைதி, சமாதானத்தை சீர்குழைப்பவர்களுக்கு எதிராக உறுதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் பின்நிற்க போவதில்லை என அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணக்கஸ்தலங்கள், வியாபார நிலையங்கள், மற்றும் குடியிருப்புகள் என்பவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய அம்பாறை மற்றும் திகன பகுதி சம்பவங்களை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

#rishma

Related posts

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு

wpengine

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

நாளை முதல் களனி பாலத்தின் போக்குவரத்து மட்டு…

wpengine