ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்நாள் அரசுக்கு பேரம் பேசுவதற்குத் தனக்கு நேரமில்லை… – யோஷித ஆவேசம்..


இந்நாள் அரசாங்கத்துக்காகப் பேரம் பேசுவதற்குத் தனக்கு நேரமில்லையெனவும், தன்னை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டா​மென்றும், இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்‌ஷ கோரியுள்ளார்.

றக்பி போட்டிகளுக்காக, தான் மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதால், பேரம் பேச தனக்கு நேரமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யோசித்த ராஜபக்‌ஷவே, அதனை முன்னின்று செயற்படுத்துகின்றார் என, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

குறித்த குற்றச்சாட்டை மறுத்த யோசித்த ராஜபக்‌ஷ, அதற்கு தனது டுவிட்டர் கணக்கில் இட்டுள்ள பதில் டுவிட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாலிங்கவின் தலைமைப் பதவி திரிமன்னவுக்கு..

wpengine

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

wpengine

தனுஷ்கவை தேசிய அணியில் இருந்து நீக்கியமை சூழ்ச்சியே.. தனிப்பட்ட மேலாளர் ஒருவரின் சூழ்ச்சி வெளிச்சத்திற்கு…

wpengine