உள்நாட்டு செய்திகள்

இந்த வருடத்தில் 17 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்….



இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 17,028 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலேயே சுமார் 30.9% டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு பரவக் கூடிய இடங்களை அப்புறப்படுத்துவதன் அவசியம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக மக்களை தௌிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக் காட்டுவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

wpengine

புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில்…

wpengine

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

wpengine