ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?



‘பொய் சொல்லப் போறோம்’, ‘கோவா’, ‘கோ’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் பியா. மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது ‘ஏ லால் ரங்க்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இது இவருக்கு இரண்டாவது இந்தி படம்.

இதுபற்றி பியா கூறியதாவது: இந்தப் படத்தை இயக்கும் செய்யது அஹ்மது அப்சல், ஏற்கனவே ‘யங்கிஸ்கான்’ என்ற படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலேயே அவரது திறமை தெரிந்தது. இந்தப் படத்தில் ரந்தீப் ஹூடா, அக்‌ஷய் ஓபராய் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நான் யாருக்கு ஜோடி என்பது சஸ்பென்ஸ். இந்தப் படம், ரத்தம் கடத்தும் அல்லது திருடும் மாஃபியா பற்றியது. ஒன்றும் தெரியாத கிராமத்துப் பெண்ணாக இதில் நடிக்கிறேன். இதில் நடிக்கும்போது நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறேன்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கவும் கதைகள் கேட்டு வருகிறேன். இவ்வாறு பியா கூறினார்

Related posts

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களது மனநிலையில் உறுதி இல்லை…

wpengine

கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

wpengine

மீண்டும் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுனவுக்கு…

wpengine