உலக செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு…


இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் சுமத்ராவை அண்மித்துள்ள லம்பாக் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. . கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் அந்த தீவில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளதுடன், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிர்லந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும், 150க்கு மேற்பட்டோர்
படுகாயம் அடைந்துள்ளனர்.

Related posts

இலங்கை – சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

wpengine

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களுக்கான கட்சி

wpengine

இந்தோனேஷியாவின் தலைநகர் நீரில் மூழ்கும் அபாயம்

wpengine