உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 82 பேர் உயிரிழப்பு…


இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டதுடன், இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ரஷிய தூதரை கொன்றவன் துருக்கி அதிபருக்கு 8 தடவை பாதுகாப்புக்கு சென்றவன்…

wpengine

சீனாவில் ‘லிப்ட்’அறுந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு…

wpengine

உலக நாடுகள் வடகொரியாவினை மிரட்டக் கூடாது – ரஷ்ய ஜனாதிபதி புதின்..

wpengine