உள்நாட்டு செய்திகள்

இந்து சமுத்திர மாநாட்டிற்காக பிரதமர் சிங்கப்பூர் விஜயம்..



பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை(01) சிங்கப்பூருக்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதம அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் 2016ம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப உரையை பிரதமர் ஆற்ற உள்ளார்.

சிங்கப்பூரின் ஷன்கிரிலா ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்து சமுத்திரத்தின் பிரதான நாடுகளை இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர நாடுகள் எதிர்நோக்கி வரும் பாதுகாப்பு பிரச்சினைகள், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றாடல் பிரச்சினைகள் போன்றன குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மேத்யூஸ் இனது பதவி விலகலினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய 2 தலைமைகள் நியமிப்பு..

wpengine

அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

wpengine