விளையாட்டு

இந்திய வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் வீரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்களுக்கும் நேற்று(27) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்கள் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய அணி வீரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, நேற்று நடக்கவிருந்த இரண்டாவது 20க்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(28) வரை பிற்போடப்பட்டது.

இதற்கமைய, அந்தப் போட்டி இன்று ஆர்.பிரேமாதாச விளையாட்டரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடையை நீக்குகிறது ICC

wpengine

ஊக்கமருந்து பரிசோதனை வலையில் சிக்கினார் குசால்

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத்….

wpengine