ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்திய அணியில் இருந்து டோனியை நீக்க முடிவு



(FASTGOSSIP|COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

38 வயதான டோனி உலக கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. உலகக் கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த வருடம் நடிபெரவுள்ள 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட டோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை இந்திய அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

ITN பதற்ற நிலையினை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்..

wpengine

கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று முதல் உரிய ஆடையில் வர அனுமதி….

wpengine

7 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் பெண்ணொருவர்

wpengine