விளையாட்டு

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் 29ம் திகதி மணமேடை ஏறுகிறார்



இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங். 35 வயதான இவர் தனது 2–வது இன்னிங்சை விரைவில் தொடங்க இருக்கிறார்.

ஹர்பஜன்சிங் நடிகை கீதா பஸ்ராவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடி இந்த மாதம் இறுதியில் திருமணம் செய்ய போவதாகவும், இதற்காக விஷேட திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஹர்பஜன்–கீதா பஸ்ரா திருமண திகதி வெளியாகி உள்ளது. வருகிற 29ம் திகதி திருமணம் நடக்கிறது. இதை ஆடை அலங்கார நிபுணர் ஏ.டி.சிங் டூவிட்டரில் திருமண இதழுடன் வெளியிட்டு உள்ளார்.

ஹர்பஜன் சொந்த ஊரான ஜலந்தாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்ஹராவில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்கிறமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மேத்யூஸ் உடன் ஒன்பது பேர் டில்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டது… [அணியின் முழு விவரம்]

wpengine

மேத்யூஸ் இற்கு விசேட பரிசோதனை – குருசிங்க’விடமிருந்து விசேட அறிவித்தல்..

wpengine

உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர் மாலிங்க – சச்சின்

wpengine