விளையாட்டு

இந்திய அணியின் இளம் வீரருக்கு 08 மாத காலம் விளையாட தடை



(FASTNEWS|COLOMBO) -தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் இந்தூரில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் திகதிஅவர் மீது குற்றசாட்டும் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட நவம்பர் 15-ம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளில் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ஓட்டங்கள் எடுத்துள்ளதுடன், ஒரு சதமும் அவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸிக்கு எதிரான போட்டியில் ‘ஆக்ரோஷத்துடன் பந்துவீசுவேன்’.. – ரியாஸ் ஆவேசம்..

wpengine

அவுஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுக்கும் மழை!

wpengine

2015ம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பு..

wpengine