ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்தியா அரசியலில் மூக்கினை நுழைத்தோம்.. ஒப்புக் கொள்ளும் Cambridge Analytica…



இங்கிலாந்து நாட்டின் நிறுவனமான Cambridge Analytica அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு செயலி (App) மூலம் Facebook பயனாளிகளின் தகவல்களை திரட்டி டிரம்ப் ஆதரவாளர்களுக்கு அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து Cambridge Analytica’வை தன்னுடைய தளத்தில் இருந்து நீக்கிய பேஸ்புக், இதற்காக மன்னிப்பு கேட்டதோடு இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காது என உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மட்டுமின்றி இந்தியாவில் நடந்த தேர்தல்களிலும் Cambridge Analytica ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுகுறித்து இந்திய பத்திரிகையாளர்கள் பலரின்கேள்விகளுக்கு Cambridge Analytica நிறுவனத்தின் விசில் ப்ளோவர்’ கிறிஸ்டோபர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் “ஆம், இந்திய அரசியல் கட்சிகளுக்காகவும் நாங்கள் வேலை செய்துள்ளோம்” என கூறியுள்ளார். பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் ஜாதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கும் வேலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இன்னும் ஒரு சில கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக கூறவில்லை என்றும் அவ்வாறு கூறினால் பெரும் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Related posts

பொதுபல சேனா உடனான தொடர்பு குறித்து கோட்டா ஜம்மியத்துல் உலமாவிடம் தெரிவிப்பு…

wpengine

நாமல் – லிமினியின் முதல் பயணத்திலேயே சீனச் சாகசங்கள் [VIDEO]

wpengine

மஹிந்தவின் பாதுகாவலர்களுக்கு ஓரவஞ்சனை

wpengine