உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கையின் தோல்விக்கு மேத்யூஸூம் காரணம் – சந்திமால் கருத்து…



இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் தோல்விக்கு மேத்யூஸூம் ஒருவிதத்தில் காரணம் என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் சுட்டிக்காட்டியுள்ளார்.

2வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இலங்கை அணித் தலைவர் சந்திமால் கூறியதாவது;

“.. இலங்கை அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் காயமடைந்து வெளியேறியது அணியில் சிக்கலை ஏற்படுத்தியது.

இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இல்லாத நிலையை ஏற்படுத்தியது. அதனை சரி செய்ய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஒரு சில ஓவர்கள் மிதவேகப்பந்து வீசவேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில், மேத்யூஸ் பந்துவீசாதது இலங்கை அணிக்கு மிகப் பெரிய இழப்பு..” என குறிப்பிட்டுள்ளார்.

தனது காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக சுகம் பெறாத மேத்யூஸ் பந்து வீசுவதற்கு இன்னும் தயாராகவில்லை. அவர் பந்து வீசக்கூடாது என்று இலங்கை அணி உடற்பயிற்சியாளர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

Azeem Kilabdeen

ரத்மலானை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாகாண ச​பை உறுப்பினர் காயம்…

wpengine

புகையிலைக்கான வரியை 90% ஆக அதிகரிக்க அரசு நடவடிக்கை

wpengine