கேளிக்கை

இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா ! வசூல் வேட்டையில் விக்ரம் திரைப்படம்..



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் விக்ரம்.

தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் அவரின் குருநாதராக கமலை வைத்து சம்பவம் செய்துள்ளார் என்றே கூறலாம். அந்தளவிற்கு விக்ரம் திரைப்படம் பயங்கர மாஸ்ஸாக எடுத்துள்ளார் லோகேஷ்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என டாப் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அவர்களின் கதாபாத்திரங்களில் ரசிகர்கள் மனதை வென்றுள்ளனர்.

இந்நிலையில் அனைவரையும் கவர்ந்துள்ள விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று மட்டுமே இப்படம் விக்ரம் திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இதற்கிடையே தற்போது இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் விக்ரம் திரைப்படம் ரூ.65 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம்.

Related posts

சமந்தா நடிக்கும் ‘யசோதா’

wpengine

நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை பார்க்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி…

wpengine

ஹன்சிகாவின் பெயர் நட்சத்திரத்திற்கு

wpengine