உள்நாட்டு செய்திகள்

மேலும் 143 மாணவர்கள் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு திரும்ப முடியாமல் இந்தியா புது டெல்லி நகரில் சிக்கியிருந்த 143 இலங்கை மாணவர்களுடன் கூடிய ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1196 என்ற குறித்த விசேட விமானம் இன்று மதியம் 01.40 மணிக்கு இந்தியாவின் புதுடில்லி நகரில் இருந்து புறப்பட்ட நிலையில் குறித்த விமானம் மாலை 4.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இ‌வ்வாறு அழைத்து வரப்பட்ட மாணவ‌ர்க‌ள் அனைவரு‌ம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அசங்க குருசிங்க’வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் உயரிய பதவி…

wpengine

இன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

wpengine

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்…

wpengine