உலக செய்திகள்விசேட செய்தி

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநில ரயில் விபத்தில் இதுவரை 23 பேர் பலி, 60 பேர் காயம்..



இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(19) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், புகையிரதத்தின் 14 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ படைகள் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, புகையிரத உயரதிகாரிகளும் களத்தில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 இலட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என இந்திய ரயில்வே போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

பிரேசிலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு…

wpengine

மோடியின் தலைக்கு 100 கோடி – ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் கட்சியின் தலைவர்

wpengine