உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியாவினை பாகிஸ்தான் எப்போதுமே வெல்ல வேண்டும் – மலாலா



இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு நிலவ வேண்டும். அதேவேளையில், கிரிக்கெட்டில் எப்போதுமே இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என தலிபான்களின் கொடூர தாக்குதலில் தப்பி உயிர்பிழைத்த மலாலா யூசுப்சாய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். எதிர்காலத்தில் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு சமூகச்சேவை ஆற்ற வேண்டும் என்ற தனது உள்ளக்கிடக்கையை இந்த பேட்டியின் போது வெளியிட்ட அவர், தலிபான்களின் கொலைவெறி தாக்குதலில் நான் உயிருக்கு போராடிய வேளையில் இந்திய மக்கள் என்மீது காட்டிய அன்பு என்னை வியக்க வைத்தது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் சென்று டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் பெண்கல்விக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, இளம்பெண்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு நிலவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

அதேவேளையில், இருநாடுகளுக்கும் இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என விரும்புவதாக மலாலா தெரிவித்துள்ளார்.

 

(riz)

Related posts

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

wpengine

அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு…

wpengine

வெள்ளவத்தை இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் – கடற்படை முன்னாள் பேச்சாளர் தசநாயக்கவை கைது செய்ய உத்தரவு…

wpengine