உள்நாட்டு செய்திகள்

இந்திக’வால் தனக்கு கொலை அச்சுறுத்தல் – ரஞ்சன் பொலிஸில் முறைப்பாடு…



திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

நேற்று(01) நடைபெற்ற திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது திவுலபிட்டிய பகுதியில் இடம்பெறும் மண் அகழ்வு சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்தவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அது மோதல் நிலைமைக்கு சென்ற நிலையில்,அருகில் இருந்தவர்கள் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் போது இந்திக அனுருத்த கொலை செய்யப் போவதாக தன்னை அச்சுறுத்தியதால், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாகவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின் கைகலப்பு…

[youtube url=”https://www.youtube.com/watch?v=G1zTeaeWnTc” width=”560″ height=”315″]

Related posts

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…

wpengine

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு ஜானாதிபதி விசேட உரை..!

wpengine

ஜனாதிபதியை சந்திக்கும் கெளதம் அதானி

wpengine