உலக செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…



சைபீரியாவில் பனிப்பொழிவு இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூமியின் உச்சக்கட்ட குளிர்பிரதேசமாக சைபீரியா உள்ளமையினால் இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகளவில் நிலவுகிறது. வெப்ப நிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான குளிர் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீட்டுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாத இறுதி வரையில் குளிர் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், மின் உற்பத்தி அமைப்புகளுக்கு அரசாங்கம், அவசரகால எச்சரிக்கைகள் வெளியிட்டு உள்ளது.

Related posts

கொவிட் 19: பீஜிங் நகரத்துக்கு திரும்புபவர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

wpengine

அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

wpengine

ஈரானை எதிர்க்கவும், சிரிய விவகாரத்திலும் இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு – அமெரிக்கா..

wpengine