உள்நாட்டு செய்திகள்

இடைக்கால அறிக்கையை எரித்து மத்திய மாகாண சபையில் எதிர்ப்பு..



உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்து பெறப்பட்ட பின்னர் வௌியிடப்பட்ட வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை எரித்து மத்திய மாகாண சபையில் எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களே குறித்த இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குறித்த அறிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த மதம் மற்றும் தற்போதுள்ள மாகாண சபை அதிகாரங்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பிரேமவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அவர் இன்றைய(03) சபை அமர்வின் போது குறித்த அந்த அறிக்கையை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

எசல பெரஹெர ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

கொள்கலன்களை விடுவிக்க நிதி விடுவிப்பு

wpengine

பாடசாலை 2ம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 4 ல் ஆரம்பம்…………

wpengine