உள்நாட்டு செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊவா, கிழக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல், வடமத்திய, வடக்கு, மத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

சமூக வலைத்தளங்களை முடக்கிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு முறைப்பாடு…

wpengine

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீளவும் கல்வி அமைச்சுப் பதவி வழங்கியமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு..

wpengine

சைட்டத்திற்கு தொடர்ந்தும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.. வதந்திகளை நம்ப வேண்டாம் – சைட்டம் நிர்வாகம்…

wpengine