உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இடப்பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசாங்கம் இணக்கம்..


இடது பக்கத்தால் முந்திச் சென்று பாதை ஒழுங்குகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள 25,000 ரூபா தண்டப்பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் கொழும்பில் நிதி அமைச்சருடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடது பக்கத்தால் முந்திச் செல்லல் உட்பட 7 போக்குவரத்துக்  குற்றச்செயல்களுக்கான தண்டப் பணத்தை அதிகரிக்கும் பிரேரணைகள் வரவு செலவுத் திட்ட யோசனையில் அரசாங்கம் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

AH1-N1 வைரஸ் தொற்று – கண்டி போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள்..

wpengine

வஸீம் தாஜுடீன் மரணித்திருந்த இடத்தினை ஆராயச் சென்ற ஆராய்ச்சிக் குழு

wpengine

ஹிருணிகாவின் டிபெண்டரை 4.5 மில்லியன் ரூபாய் பிணை முறியில் விடுவிப்பு

wpengine