உலக செய்திகள்

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி – சுமார் 24 பேர் காயம்…



அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் நேற்று(01) இரவு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திறந்த வெளியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது இளைஞர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் லாஸ் வேகாஸ் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், காயடைந்துள்ளவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

மியன்மார் மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலனை…

wpengine

ரஷ்ய அதிபர் புதின்னுக்கு ISIS கொலை அச்சுறுத்தல்.

wpengine

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம் அடைய முயன்ற 157 அகதிகள் கைது

wpengine