உலக செய்திகள்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு..!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். 

விஜய் ஆண்டனியின் 16 வயதுடைய மகளான மீரா சர்ச் பார்க் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு கல்விகற்று வந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தையின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் அவதானித்து தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தொடர்பாக பொலிஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவத்தின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

Related posts

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை..!

wpengine

இலண்டன் பள்ளியில் இடம்பெற்ற கத்திகுத்து – சந்தேக நபர் கைது

wpengine

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் உயிரிழப்பு…

wpengine