உலக செய்திகள்

ஆஸ்திரேலிய துணை பிரதமர் இராஜினாமா…



முன்னாள் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில், அரசியல் நெருக்கடிக்கு ஆளான பார்னபி ஜாய்ஸ், ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அமைச்சரின் நடத்தை விதிகளை துணைப் பிரதமர் ஜாய்ஸ் மீறினாரா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். “தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பை ஒதுக்கி வைக்க வேண்டும்” என செய்தியாளர்களிடம் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. இதுகுறித்து கடந்த வாரம் விமர்சித்த ஆஸ்திரேலிய பிரதமர் மல்காம் டர்ன்புல், “ஊழியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

Related posts

ஹொஸ்னி முபாரக் காலமானார்

wpengine

15 கியூபா தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு…

wpengine

சிரியாவில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விமானத் தாக்குதல்…

wpengine